Sunday, June 4, 2017

காயல் வாடா / Kayal vaada

இஃப்தார் சமயம் முக்கியமாக காயல்பட்டிணத்தில் கஞ்சியுடன் இந்த வாடாவை சேர்த்து பாரம்பரியமாக பரிமாறுவது  வழக்கம். நீண்ட நாள் செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்து செய்து அசத்தியாச்சு.செமை.
கொஞ்சமாகத் தான் முதலில் செய்து பார்த்தேன்.
தேவையான பொருட்கள்;-
முதலில் வாடா மேல் மாவிற்கு :-
அரிசி மாவு ( வீட்டில் தயார் செய்த புட்டு,ரொட்டி மாவு) - அரை கப்
சோறு - கால்  அல்லது அரை கப்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் ,உப்பு தேவைக்கு.
சோற்றை சிறிது தண்ணீர்,மஞ்சள் தூள்,தேங்காய்த்துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்ததை  மாவுடன் ஊறும் அளவு தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.


வாடாவிற்கு உள் அடக்கம் செய்ய வேண்டும்.
அரை கப் மாவு தான் போட்டு செய்து பார்த்தேன், அதற்கு தக்க உள்ளடக்கம் செய்ய 
தேவையான் பொருட்கள்;-
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெம்ங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
கருவேப்பிலை - 1இணுக்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
வேக வைத்த இறால் 100 கிராம் (பெரிய இறாலாக இருந்தால் சிறிய துண்டாக்கிக் கொள்ளவும்)
கீரைப்பொடி 3  ஸ்பூன் சேர்க்கலாம்.(மாசி சேர்ந்த கீரைப் பொடி)
அப்படி இல்லையெனில் மாசித்தூள் 2 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.மிளகாய்த்தூளோ அல்லது சீரகம்,சோம்பு,வற்றல் சேர்ந்த பொடியோ காரத்திற்கு சேர்த்துக் கொள்ளலாம்.
தேங்காய்த்துருவல் - கால்  கப்.

நான் மாசி சேர்ந்த கீரைப்பொடியையே சேர்த்தேன். காயல் கீரைப்பொடி  குறிப்பிற்கு என் வலைப்பூவில் பகிர்வைக் காண   இங்கே கிளிக்கவும். 


செய்முறை:- 
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம்,கருவேப்பில்லை போட்டு நன்கு வதக்க வேண்டும், பின்பு மஞ்சள் தூள்,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
பின்பு அதில் வேகவைத்த இறால், தேங்காய்ப்பூ, கீரைப்பொடி சேர்த்து வதக்கவும். பின்பு அடுப்பை அணைத்து மாசிப்பொடி சேர்க்கவும்.உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
கீரைபொடியில் மாசியும் சேர்த்து இருந்தால் தனித்தனியாக போட வேண்டாம்.


உள் அடைக்கம் தயார். இதனை தொடுகறியாகக் கூட சாப்பிடலாம். சமோசா, சோமாஸ் குள் வைக்கவும் உபயோகிக்கலாம்.

 ஊறவிட்ட மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்க வேண்டும். எனக்கு பத்து உருண்டை வந்தது. எனவே ஐந்து வாடா செய்ய முடிந்தது.
ஈரத்துணியை கிச்சன் கவுண்ட்டரில் விரித்து தண்ணீர் தொட்டு உருண்டையை வட்டமாக தட்ட வேண்டும். இப்படி இன்னொரு உருண்டையையும் தட்டி நடுவில் உள்ளடக்கம் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து வைக்கவும்.பரத்திய  மாவினால் மூடவும்.விளிம்பில் தண்ணீர் தொட்டு ஒட்டவும்.தொப்பி போல் காணப்படும்.

வாடாவைச் சுட வாணலியில் எண்ணெய் தேவைக்குச் சூடு சேய்யவும்.மிதமான சூட்டில் வைத்து ஒன்று அல்லது இரண்டாகவோ போட்டு நன்கு பொன்னிறத்தில் பொரிந்து வரும் பொழுது எடுக்கவும்.




சூடான சுவையான காயல் வாடா தயார்.கஞ்சியுடன் பரிமாறவும்.

முதல் முறை முயற்சி செய்த பொழுதே சூப்பராக வந்து விட்டது.
ரெசிப்பி:-  மிக்க நன்றி.காயல் யூ டியூப் பகிர்வு.


No comments: