Sunday, June 18, 2017

ஹைதராபாத் சிக்கன் ஹலீம் (ஸ்லோ குக்கர் முறை) / Hyderabad chicken haleem (Slow cooker method)

தேவையான  பொருட்கள்;-
முழுக் கோதுமை - 200 கிராம்
பார்லி - 2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
மசூர் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
போன்லெஸ் சிக்கன் -500  கிராம்
ஷாஹி ஹலீம் மசாலா - 3 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் & நெய் - தலா அரை கப் (175 மில்லி)
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
முந்திரி பருப்பு - 15 எண்ணம்
இஞ்சி பொடியாக நறுக்கியது - 1  -2டேபிள்ஸ்பூன்
மல்லி,புதினா நறுக்கியது - சிறிது
உப்பு - தேவைக்கு.

செய்முறை:-
கோதுமை,பார்லி ,பருப்பு வகைகளை நன்கு அலசி ஊற வைக்கவும்.


 சிக்கன் சுத்தம் செய்து துண்டாக்கி அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
குறிப்பிட்ட எண்ணெய் நெய்யில் வெங்காயம் தாளிக்க 2 டேபிள்ஸ்பூன் எடுத்து வைத்து விட்டு  மீதி எண்ணெய் நெய் சூடு செய்யவும்.ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.பின்பு  சிக்கன் சேர்த்து வதக்கவும்.



 ஷாகி ஹலீம் மசாலா 3 டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்பு ஸ்லோ குக்கர் அல்லது ப்ரஸர் குக்கரில் கோதுமை பருப்பு வகைகளைச் சேர்க்கவும்.ஸ்லோ குக்கர் என்றால் 5 நிமிடம் முற்சூடு செய்து  8 கப் தண்ணீர் சேர்க்கவும்.கோதுமை பருப்பு வகைகளைச் சேர்க்கவும்.வதக்கிய சிக்கன் சேர்க்கவும். குக்கரில்  என்றால் தண்ணீர் கொஞ்சம் அதிகம் சேர்க்க வேண்டும். சிம்மில் வைத்து வேக விடவும்.


 ஸ்லோ குக்கரில் 5-6 மணி நேரம் வேக வைக்கவும்.மீடியம் ஹீட்டில் செட் செய்யவும்.
 மூடி வேக வைக்கவும்.

  நன்கு சாஃப்டாக வெந்து கட்டியாகி வரும்.


video
ஹேண்ட் ப்லெண்டர் கொண்டு அரையும் குறையுமாக மசிக்கவும். பரபரன்னு இருக்குமாரு மசித்து மீண்டும் தண்ணீர் தேவைப்பட்டால் ஒரிரு கப் சேர்க்கவும்.கொதி வரவும் அடுப்பை ஸ்விட் ஆஃப் சேய்யவும்.


 ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சிவற வதக்கவும்.அத்துடன் முந்திரியும் சேர்த்து லேசாக சிவற வறுத்து எடுக்கவும்.
குக்கரில் தயாரான ஹலீமை ஒரு செர்விங் பவுல் அல்லது ஹாட் பாக்ஸில் எடுக்கவும்.அதன் மீது தாளித்த வெங்காயம்,முந்திரி,இஞ்சி துருவல் சேர்க்கவும்.
 பொடியாக நறுக்கிய மல்லி புதினா சிறிது தூவவும்.
சூடாகப் பரிமாறவும்.பரிமாறும் பொழுது விரும்பினால் எலுமிச்சை துண்டுகளுடன் பரிமாறலாம்.

No comments: