Thursday, October 25, 2012

பாதாம் ரைஸ் கீர் / Almond Rice Kheer


தேவையான பொருட்கள்;
கெட்டிப் பால் - அரை லிட்டர்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 3 அல்லது ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்
சாஃப்ரான் - பின்ச்
பாதாம் தோல் நீக்கியது - 15
வேகவைத்த பாசுமதி சோறு- 4 டேபிள்ஸ்பூன்
ஸ்வீட்டெண்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 4 - 5 டேபிள்ஸ்பூன் (தேவைக்கு)

பரிமாறும் அளவு -  4 நபர்
சமைக்க ஆகும் நேரம் - அரை மணி நேரம்.

அரை லிட்டர் பாலை காய்ச்சி எடுக்கவும்.பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் நெய் , கீறிய ஏலக்காய் சேர்க்கவும்.நெய் உருகவும் காய்ச்சிய பால் சேர்க்கவும்.பால் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது சாஃப்ரான் சேர்க்கவும்.நறுக்கிய பாதாம் சேர்க்கவும்.கலந்து விடவும்.வேகவைத்து மசித்த பாசுமதி சோறு சேர்க்கவும்.எல்லாம் சேர்ந்து கொதித்து வற்றி வரும். அடி பிடிக்காமல் கிண்டி விடவும்.

நன்கு வற்றி கெட்டியாக வரும் பொழுது ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து  நன்கு கலந்து சிம்மில் வைத்து திரும்பவும் கலந்து விடவும்.

இப்படி  ஊற்றுவது போல் கெட்டியாக இருக்கும். அடுப்பை அணைக்கவும்.
ஆறினால் இன்னும் கெட்டியாகும். வெது வெதுப்பாக அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.

சுவையான பாதாம் ரைஸ் கீர் ரெடி.

செமையாக இருக்கும்.அழகுக்கு வேண்டுமானால் தோலுடன் கூடிய ஊறவைத்த பாதாமை நறுக்கி மேலே ஒன்றிரண்டு விரும்பினால் தூவி பரிமாறவும்.ஒரு சிலர் பாதாம் அரைத்து சேர்ப்பார்கள்.தோல் நீக்கி நறுக்கி சேர்க்கும் பொழுது வாயில் கடிபடும் சாப்பிட அருமையாக இருக்கும்.கீறி அல்லது தட்டிப் போட்ட ஏலக்காயை மறக்காமல் எடுத்து விட்டு பரிமாறவும் ஏலக்காய் பொடி சேர்த்தால் எடுக்க தேவையில்லை.

இக்குறிப்பை நான்  என் ஆங்கில வலைப்பூவில் நடத்தும் முதல் இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.
போட்டி முடிய இன்னும் ஐந்து நாட்களே இருக்கிறது. உங்கள் குறிப்புக்களை தொடர்ந்து அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அனைவருக்கும் இனிய  புனித ஹஜ்ஜுப் பெருநாளாம் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

16 comments:

ராதா ராணி said...

சூப்பர்.. ரொம்ப நல்லா இருக்கு.

GEETHA ACHAL said...

சூப்பரான சுவையான கீர்...பார்க்கும் பொழுதே சாப்பிட தோனுது...

Saraswathi Tharagaram said...

I never tried this combo but I know it will taste great...Bookmarking it..

Vimitha Anand said...

Looks so creamy n yummy. Never tried adding badam to rice kheer

திண்டுக்கல் தனபாலன் said...

ஸ்...ஸ்... சூப்பர்...

நன்றி...

Priya said...

Rich looking irresistible kheer.

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் ஆசியா!

இமா said...

சூப்பர் குறிப்பு ஆசியா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் ருசியான இனிப்பான பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

கோவை2தில்லி said...

பிரமாதமா இருக்குங்க....

வாழ்த்துகள்.

Jaleela said...

ம்ம் யும்ம்ய் யா இருக்கு நாவில் நீர் ஊறுது

மாதேவி said...

பாதாம் கீர் சுவைத்துக்கொண்டோம். இனிய பெருநாள் வாழ்த்துகள்.

athira said...

ஆஹா சூப்பர். இங்கு இது ரைஸ் புடிங் என ரின்களில் கிடைக்குது. செய்து பார்க்கிறேன்.

புதுப்பாலம் said...

Happy EID AL ADHA

Mahi said...

பாதாம் பாயசம் சூப்பரா இருக்கு ஆசியாக்கா! சாதம் வேகவைத்து சேர்ப்பது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும், க்ரீமியா சூப்பரா இருக்கு பார்க்கவே! :)

Asiya Omar said...

வாழ்த்துக்களும் கருத்துக்களும் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி.